சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பித்தளை பொருட்கள் திருட்டு

சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பித்தளை பொருட்கள் திருட்டு
X

நகை திருட்டு (மாதிரிப் படம்).

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6.50 பவுன் நகை, வெள்ளி கொலுசு, பித்தளை குடங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சித்தோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6.50 பவுன் நகை, வெள்ளி கொலுசு, பித்தளை குடங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தோடு அருகே உள்ள மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாது. இவரது மனைவி சுமதி (வயது 50). கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் மாது உயிரிழந்து விட்டார். இந்தநிலையில், தனது மூத்த மகள் மஞ்சு, மருமகன் சுரேஷ்குமார் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் உள்ள தனது தாயாரை பார்க்கச் சென்றார். பின்னர், மகள், பேரனுடன் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 6.50 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது. மேலும், வெள்ளி கொலுசு, அரைஞான், வீட்டில் வைத்திருந்த 3 பித்தளை குடங்களையும் காணவில்லை. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும்.

இதுகுறித்து. சித்தோடு போலீசில் சுமதி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!