சத்தி பூ மார்க்கெட்டில் இன்று (மார்ச்.29) முல்லைப்பூ கிலோ ரூ.640-க்கு விற்பனை

சத்தி பூ மார்க்கெட்டில் இன்று (மார்ச்.29) முல்லைப்பூ கிலோ ரூ.640-க்கு விற்பனை
X

பைல் படம்.

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று (மார்ச்.29) நடைபெற்ற ஏலத்தில் முல்லைப்பூ கிலோ ரூ.640-க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர், பண்ணாரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே கரட்டூர் ரோட்டில் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

அதனை ஏலம் மூலம் வாங்கும் வியாபாரிகள் ஈரோடு மட்டுமல்லாமல் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்புகின்றனர். இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி, இன்று (மார்ச்.29) நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் பூக்களை கொண்டு வந்திருந்தனர்.

அதன்படி, இன்று (மார்ச்.29) புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.490 ,

முல்லைப்பூ - ரூ.640 ,

காக்கடா - ரூ.400 ,

செண்டு மல்லி - ரூ.71 ,

கோழிக்கொண்டை - ரூ.85 ,

கனகாம்பரம் - ரூ.250 ,

சம்பங்கி - ரூ.50 ,

அரளி - ரூ.100 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.220-க்கும் விற்பனையானது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil