சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,905-க்கு விற்பனை

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,905-க்கு விற்பனை
X

மல்லிகைப்பூ (பைல் படம்)

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.2,905-க்கு விற்பனையானது.

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.2,905-க்கு விற்பனையானது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தாண்டாம்பாளையம், சிக்கரசம்பாளையம், வடவள்ளி, ராஜன்நகர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் மல்லிகை, முல்லை, சம்மங்கி, செண்டுமல்லி, உள்ளிட்ட மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே கரட்டூர் ரோட்டில் உள்ள உள்ள மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் இயங்கும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி இன்று வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இன்றைய (17.01.2023) ஏலத்தில் விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.2,905 ,

முல்லைப்பூ - ரூ.1,200 ,

காக்கடா - ரூ.1,200 ,

செண்டுமல்லி - ரூ.78 ,

கோழிக்கொண்டை - ரூ.130 ,

ஜாதி முல்லை - ரூ.1,000

கனகாம்பரம் - ரூ.510 ,

சம்பங்கி - ரூ.50 ,

அரளி - ரூ.220 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.100-க்கும் விற்பனையானது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!