சத்தியமங்கலத்தில் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை
மல்லிகைப்பூ.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனையானது. பனிப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பவானிசாகர், பண்ணாரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ, செண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.
அங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே கரட்டூர் ரோட்டில் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும்.
அதன்படி, மார்க்கெட்டுக்கு சீசன் காலங்களில் தினமும் 6 டன் பூக்கள் வரத்தும், சாதாரண காலங்களில் 2 டன் பூக்கள் வரத்தும் இருப்பது வழக்கம். இந்த நிலையில், தற்போது பனிப்பொழிவு காலம் என்பதால் மல்லிகைப்பூ விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது.
பூக்களின் வரத்து குறைந்ததால் மல்லிகைப்பூவை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3 ஆயிரத்து 120க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (சனிக்கிழமை) ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.5 ஆயிரத்து 100க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று (ஜன.20) சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-
மல்லிகைப்பூ - ரூ.5,100 ,
முல்லைப்பூ - ரூ.2,250 ,
காக்கடா - ரூ.1,900 ,
செண்டுமல்லி - ரூ.90 ,
கோழிக்கொண்டை - ரூ.160 ,
ஜாதி முல்லை - ரூ.1,000 ,
கனகாம்பரம் - ரூ.1,300 ,
அரளி - ரூ.160 ,
துளசி - ரூ.50 ,
செவ்வந்தி - ரூ.160க்கும் விற்பனையானது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu