ஈரோடு சூரியம்பாளையத்தில் அயோடின் சத்து குறைபாடு தடுப்பு விழிப்புணர்வு முகாம்..!

ஈரோடு சூரியம்பாளையத்தில் அயோடின் சத்து குறைபாடு தடுப்பு விழிப்புணர்வு முகாம்..!
X

ஈரோடு சூரியம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட மாதேஸ்வரன் நகர் பகுதியில் நடந்த விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு சூரியம்பாளையம் பகுதியில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு மற்றும் அயோடின் சத்து குறைபாடு தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (22ம் தேதி) நடந்தது.

ஈரோடு சூரியம்பாளையம் பகுதியில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு மற்றும் அயோடின் சத்து குறைபாடு தடுப்பு விழிப்புணர்வு முகாம் இன்று (22ம் தேதி) நடந்தது.

ஈரோடு மாநகராட்சியில் மூன்றாவது வார்டில் சூரியம்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட மாதேஸ்வரன் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு, மழைக்கால நோய்கள் மற்றும் அயோடின் சத்து குறைபாடு தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காச நோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கு உண்டான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீமைகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, அயோடின் சத்து அதன் முக்கியத்துவம், அயோடின் கலந்த உப்பு சமையலில் பயன்படுத்த வேண்டியதின் அவசியம், அயோடின் சத்து குறைபாடுகளினால் கர்ப்பிணிப் பெண்கள், வளர் இளம் பெண்கள், குழந்தைகள், பள்ளிப்பருவத்தினர்கள் மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் உடல் பாதிப்புகள், அயோடின் சத்து குறைபாட்டை தடுக்க மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள், மழைக்கால நோய்கள் மற்றும் அதன் பாதுகாப்பு முறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள், டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இம்முகாமில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட சுகாதார அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு சமூக சேவகர் சங்கீதா, மருத்துவ அலுவலர் சவீதா, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், சுகாதார ஆய்வாளர் சீனிவாசன், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 50 பேர்கள் கலந்து கொண்டனர்.

இறுதியில் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், முகாமில் கலந்து கொண்டவர்களில் காசநோய்க்கு உண்டான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு எக்ஸ்ரே பட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
Similar Posts
அமேசானில் தள்ளுபடி..! தேவையானத அள்ளிட்டு போங்க..!
ஒன்ப்ளஸ் 13 இந்தியாவுல எப்ப கிடைக்கும் தெரியுமா?
சருமம் எப்போதும் இளமையுடன் இருக்கவேண்டுமா? இதோ 5 வழிமுறைகள்
உங்கள் முகம் பிரகாசமாக ஜொலிக்கவேண்டுமா? வாழை மாஸ்க் வைத்து பாருங்களேன்
ஒரு மாதம் உப்பில்லா உணவு சாப்பிட்டால் நமது உடல் என்ன ஆகும் தெரியுமா?
டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: இந்தியா முழுவதும் 188 ரயில்கள் ரத்து
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் புதினுடன் மோடி சந்திப்பு: உக்ரைன் போரை நிறுத்த யோசனை
கூகுள் ஊழியர்களுக்கு இலவச உணவு ஏன்? சுந்தர் பிச்சை ஓபன் டாக்
ரியல்மி ஜிடி 7 ப்ரோ - 60 ஆயிரத்துக்கு இதுல என்ன இருக்கு?
ஈரோடு நஞ்சனாபுரத்தில் கிராமப்புற நல மேம்பாட்டு முகாம் நிறைவு
கோபியில் பெண்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கில் திட்டங்கள் குறித்து விளக்கம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நுகா்வோா் அமைப்புகளின் காலாண்டு கூட்டம்
ஆப்பிள் iOS 18.1 நினச்சுகூட பாக்கமுடியாத அம்சங்களுடன்...!