/* */

ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
X

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.

வேலைவாய்ப்பற்ற பொது மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திங்கட்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம், மேல்நிலைக்கல்வி (12ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400ம் பட்டதாரிகளுக்கு ரூ.600ம் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு 10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750ம் பட்டதாரிகளுக்கு ரூ.1000ம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 31.03.2024 உடன் முடிவடையும் காலாண்டிற்கு தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர் இவ்வுதவித்தொகையினை பெறுவதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் அணுகியும் அல்லது பின்வரும் இணையதளம் வாயிலாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

10ம் வகுப்பு தேர்ச்சி, தேர்ச்சி பெறாதவர்கள் (முறையாக பள்ளியில் படித்து தோல்வி அடைந்திருக்க வேண்டும்) அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் முடிவடைந்திருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 31.12.2023 அன்று 45 வயதும், இதர பிரிவினருக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது.

விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பள்ளி/கல்லூரியில் நேரடியாக படித்துக் கொண்டிருக்க கூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்). விண்ணப்பதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும். சுய வேலைவாய்ப்பிலும் ஈடுபட்டிருக்க கூடாது. விண்ணப்பதாரர் தனது பள்ளி, கல்லூரிக் கல்வியை முழுமையாக தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும் அல்லது பெற்றோர், பாதுகாவலர் குறைந்தது 15 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்எந்தவொரு நிதியுதவியையும் பெறுபவராக இருத்தல் கூடாது. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் போன்ற தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள். பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் போன்ற தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெறத் தகுதியற்றவர்கள். விண்ணப்ப படிவங்களை https://tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியும் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வுதவித்தொகை பெற முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப்புத்தகம், ஆதார்கார்டு. குடும்பஅட்டை மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே இவ்வலுவலகம் வாயிலாக உதவித்தொகை பெற்றுவரும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் பிப்ரவரி 2024 மாதத்திற்குள் சுயஉறுதி ஆவணத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 8 Jan 2024 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!