ஈரோடு மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
பைல் படம்.
சமூக நலத்துறையின் மூலம், ஈரோடு மாவட்ட சமூகநல அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு பாதுகாப்பு அலுவலர் (பாலினம் பெண் - 1) பணியிடத்திற்கு பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இப்பணிக்கு (சமூகவியல்/ உளவியல்/ சமூகப் பணிகள்) ஏதேனும் ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும். மாதம் ரூ.30 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட இணையதள முகவரி www.erode.nic.in-யில் உரிய படிவம் மற்றும் தகுதிகள் குறித்த விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தகுதியுள்ளவர்கள் இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம் மாவட்ட ஆட்சியரகம், 6வது தளம் (பழைய கட்டடம்) ஈரோடு - 638011 என்ற முகவரிக்கு வரும் நவம்பர் மாதம் 9ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 0424-2261405 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu