ஈரோடு மாவட்டத்தில் 10 சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாவட்டத்தில் 10 சமுதாய அமைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்.

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 10 சமுதாய அமைப்பாளர்கள் பணியிடங்களுக்கு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 10 சமுதாய அமைப்பாளர்கள் காலிப்பணியிடங்களுக்கு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் 3, கோபி, பவானி, சத்தியமங்கலம் ஆகிய நகராட்சி பகுதிகளில்- 3, காஞ்சிக்கோவில், கொளப்பலூர், காசிபாளையம் (கோபி), நெரிஞ்சிப்பேட்டை ஆகிய பேரூராட்சி பகுதிகளில் 4 என மொத்தம் 10 சமுதாய அமைப்பாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த பணியிடங்களுக்கு ஈரோடு பெருந்துறை சாலை குமலன்குட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்வாதார மையம் மூலம் வெளிப் பணி ஒப்படைப்பு அடிப்படையில் தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணபதாரர் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவராகவும், கணினி துறையில் (எம்எஸ் ஆபீஸ்) திறன் பெற்றவராகவும், கட்டாயம் கணினி இயக்க தெரிந்தவராகவும், நல்ல பேச்சு திறன் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களில் கள அளவில் குறைந்தது ஒரு வருடம் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் பகுதி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினராகவும் சம்மந்தப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்பிலிருந்து பரிந்துரை கடிதம், தீர்மானம் நகல் பெற்று வழங்க வேண்டும். கட்டாயம் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்திற்குள் வசிப்பவராகவும், 2 ஆண்டுகளுக்கு மேலாக அமைக்கப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வா இயக்கம், புதுவாழ்வு திட்டம், ஐஎப்ஏடி ஆகிய திட்டங்களில் பணிபுரிந்து நிர்வாகம் மற்றும் நிதி முறை கேடுகள் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவராக இருத்தல் கூடாது. எனவே, இந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ ‘நகர்ப்புற வாழ்வாதார மையம், முதல் தளம், பூமாலை வணிக வளாகம், குமலன் குட்டை, பெருந் துறை சாலை, ஈரோடு- 638011 ஆகிய முகவரிக்கு சுய விபரம், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

கூடுதல் விபரங்களுக்கு 93635 12123 என்ற செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story