சித்தோட்டில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் சர்வீஸ் ஸ்டேஷன் திறப்பு

மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் சர்வீஸ் ஸ்டேஷனை டெக்ஸ்வேலி உரிமையாளர் டி.பி.குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
சித்தோடு டெக்ஸ்வேலியில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் சர்வீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் நிலவி வரும் மாசுக் கட்டுப்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பொதுமக்கள் தற்போது மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இதன் பயன்பாடு என்பது பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளைக் காட்டிலும் கிலோமீட்டருக்கு ஆறு ரூபாய் வரை மிச்சம் ஆகிறது.
மின்சார வாகனத்தின் பயன்பாடு என்பது எரிபொருள் வாகனத்தை விட குறைவாக இருக்கிறது. இதனால் தற்போது உள்ள எரிபொருளின் விலை ஏற்றத்தின் காரணமாகவும் பொது மக்களிடையே மின்சார வாகனம் என்பது இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அத்தியாவசியமாக உள்ளது.
இந்த நிலையில், மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் சர்வீஸ் ஸ்டேஷன்கள் ஈரோடு மாவட்டத்தில் இல்லாத நிலையில் முதல் முறையாக பெங்களூர் கொச்சின் நெடுஞ்சாலையில் உள்ள சித்தோடு டெக்ஸ்வேலியில் சார்ஜிங் சர்வீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டுள்ளது .
இந்த சர்வீஸ் ஸ்டேஷனை டெக்ஸ்வேலி உரிமையாளர் டி.பி.குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த துவக்க நிகழ்ச்சியில் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார் சார்ஜிங் சர்வீஸ் ஸ்டேஷன் நிறுவனர்கள் கார்த்திகேயன் குரு கார்த்தி யுவராஜ் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu