அத்தாணி அருகே 33 சென்ட் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு மிரட்டல்

அத்தாணி அருகே 33 சென்ட் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு மிரட்டல்
X

ஓடை ஆக்கிரமிப்பு ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே 33 சென்ட் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த ஆக்கிரமிப்பாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

அத்தாணி அருகே 33 சென்ட் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ஆக்கிரமிப்பாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அத்தாணி உள்ள குப்பாண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செங்காட்டுத் தோட்டம் பகுதியில் சிவப்பிரகாஷ் என்பவர் 27.5 சென்ட் நிலவியல் ஓடை பகுதியை ஆக்கிரமித்து 19 தென்னை மரங்கள் மற்றும் காம்பவுண்ட் தடுப்பு சுவர் கட்டி இருந்தார் . இதேபோல், சுதாகர் என்பவரும் 5.5.சென்டில் நெல் சாகுபடி செய்தும் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.

இதனை அகற்றும் படி அதே பகுதியைச் சேர்ந்த சீரங்கன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 13ம் தேதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று (23ம் தேதி) அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, துணை வட்டாட்சியர் பெரியசாமி ஆகியோர் மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நிலவியல் ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர்.

அப்போது, பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையின் தலைமையில் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஆக்கிரமிப்பு காம்பவுண்ட் சுவரினை மூன்று ஜேசிபி இயந்திரம் இடிக்க வந்தபோது ஆக்கிரமிப்பாளர் சிவப்பிரகாஷ் தனக்கு முறையான அறிவிப்பு வழங்கவில்லை எனக் கூறி தடுத்தார். மேலும், காம்பவுண்ட் சுவரை இடித்தால் டீசல் ஊற்றி தீ வைத்துக் கொள்வதாகவும், அருகில் இருந்த கிணற்றின் காம்பவுண்ட் சுவர் மேல் ஏறி நின்று கிணற்றில் குதிப்பதாகவும் கூறினார்.

இதனை அங்கிருந்த போலீசார் பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறிய அவரை சமாதானப்படுத்தினர். இருப்பினும் வருவாய்த் துறையினர் மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு காம்பவுண்ட் சுவரை இடித்தது மட்டுமல்லாமல் அருகில் இருந்த 30 ஆண்டுகள் பழமையான தென்னை மரங்களையும் அகற்றினர்,

ஆக்கிரமிப்பு செய்த நபர் டீசல் ஊற்றியும் கிணற்றில் குறித்தும் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!