ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா
X

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழாவையொட்டி, அழகிப் போட்டி நடைபெற்றது.

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

பெண்களின் சாதனை, கலாச்சாரம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து சாதனைகளையும் கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் நேற்று முன்தினம் (மார்ச் 8) உலக மகளிர் தினம் (International Women's Day) கொண்டாடப்பட்டது.

அந்த வகையில், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் தினவிழா தியாகி குமரன் கலையரங்கில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் பாலுசாமி விழாவிற்குத் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக டேலண்ட் மேப்பிங் கண்சல்டண்ட், மஞ்சு ஆனந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

விழாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்டு அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் சங்கரசுப்ரமணியன், இயக்குனர் முனைவர் வெங்கடாசலம், பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு பிரிவின் அமைப்பு செயலாளர் முனைவர் எம்.கவிதா, உறுப்பினர்கள் திலகவதி மற்றும் கல்பனா ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

Tags

Next Story