ஈரோடு மாவட்டத்தில் மாா்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

ஈரோடு மாவட்டத்தில் மாா்ச் 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
X

போலியோ சொட்டு மருந்து (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் மாா்ச் 3ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் மாா்ச் 3ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வியாழக்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நமது நாட்டில் போலியோ என்னும் இளம்பிள்ளை வாத நோய் ஒழிக்கப்பட்டு விட்டாலும், அண்டை நாடுகளில் இந்நோயின் தொற்று காணப்படுவதால், நோய் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலியோ சொட்டு மருந்து தினம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் , பிறந்த குழந்தை முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் மாா்ச் 3ம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையின் மூலமாக, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், துணை சுகாதார மையங்கள், துணை சுகாதார நலவாழ்வு மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உட்பட 1,412 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் 5,391 பணியாளர்களை கொண்டு 61 அரசு வாகனங்களில் சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற உள்ளது.

5 வயதுடைய 1.76 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் வரும் மார்ச் 3ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. ஆகவே, ஈரோடு மாவட்ட பொதுமக்கள் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்கு உட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு அன்றைய தினம் தங்கள் வசிப்பிட பகுதிக்கு அருகில் உள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை அணுகி இரண்டு சொட்டு போலியோ சொட்டு மருந்தை வழங்கி தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!