பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 3,851 கன‌ அடியாக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 3,851 கன‌ அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், அணைக்கு அவ்வப்போது அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் என மாறி மாறி வந்து கொண்டுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து தற்போது 72 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இந்நிலையில், திங்கட்கிழமை (நேற்று) நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால் செவ்வாய்க்கிழமை (இன்று) பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,851 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதன்படி, இன்று (செப்டம்பர் 26) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 72.37 அடி ,

நீர் இருப்பு - 11.97 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 3,851 கன‌ அடி ,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 2,900 கன‌ அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,300 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 100 கன அடி நீரும் என மொத்தம் 2,900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 1.6 மி.மீ ஆக பதிவாகியுள்ளது.

Updated On: 26 Sep 2023 3:34 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னைக்கு அனுப்பப்பட்ட ரூ.25 லட்சம்...
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பாபர் மசூதி இடிப்பை கண்டித்து திருச்சியில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    Rajju Porutham Meaning திருமணப் பொருத்தத்தில் முக்கிய பங்கு...
  4. சேலம்
    சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நோபல் பரிசு பெற்ற புத்தங்கள்: ஆட்சியர்...
  5. தமிழ்நாடு
    டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் முடங்கிய மீன்பிடி தொழில்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்வு: ஒன்றுக்கு ரூ.4.90 ஆக...
  7. திருமங்கலம்
    மதுரையில் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    New Year Wishes In Tamil 2024 புத்துணர்ச்சியைத் தரும் புத்தாண்டே ...
  9. சேலம்
    சேலத்திலிருந்து சென்னைக்கு அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்கள்
  10. சினிமா
    பாட்டு இல்லாத படம் குற்றவாளி! அமீரின் முதல் படம் இதுதான்...!