ஈரோடு மாவட்டத்தில் டேராடூன் இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் சேர விண்ணப்பம் வரவேற்பு

ஈரோடு மாவட்டத்தில் டேராடூன் இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் சேர விண்ணப்பம் வரவேற்பு
X

ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரி டேராடூன்.

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் ஜூலை 2024ல் துவங்கும் எட்டாம் வகுப்புக்கான சேர்க்கைக்கு தகுதித்தேர்வு 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதியில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே விடையளிக்க வேண்டும். ஏழாம் வகுப்பு தேறிய அல்லது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் 02-07-2011க்கும் 01-01-2013க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

விபரக்கையேடு மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித்தாள்களை கட்டணம் செலுத்தி எழுத்து மூலமாகவோ அல்லது இணையவழி www.rimc.gov.in மூலமாகவோ விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம். விலாசம் ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளில் எழுதியிருத்தல் வேண்டும். கட்டணம் பொதுப்பிரிவினர்கள் விரைவுத் தபாலில் பெற ரூ.600ம், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூ.555ம், ஜாதிச்சான்றுடன் THE COMMANDANT, RIMC FUND என்ற பெயரில் DRAWEE BRANCH, HDFC BANK, BALLUPUR CHOWK, DEHRADUN (BANK CODE-1399), UTTARAKHAND -இல் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாகப் பெற்று THE COMMANDANT RASHTRIYA INDIAN MILITARY COLLEGE, GARHI CANTT., DEHRADUN, UTTARAKHAND - 248 003 என்ற முகவரிக்கு விண்ணப்பத்துடன் அனுப்புதல் வேண்டும்.

விண்ணப்பத்திற்கான கட்டணத்தை ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியின் இணைய வழியான www.rimc.gov.in மூலமாகவும் செலுத்தி விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக் கொள்ளலாம். ராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியின் விண்ணப்பப் படிவங்கள் மட்டுமே ஒப்புக் கொள்ளப்படும். தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட ராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரி ஹாலோகிராம் முத்திரையிடப்படாத விண்ணப்பப்படிவங்கள் நிராகரிக்கப்படும். டேராடூனிலிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு (இரட்டையாக) தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் சாலை, பூங்கா நகர், சென்னை 600 003 என்ற முகவரியில் வரும் அக்.15ம் தேதியன்று மாலை 5.45 மணிக்குள் சென்று சேரத்தக்க வகையில் அனுப்பி வைத்தல் வேண்டும்.

எழுத்துத்தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரியின் www.rimc.gov.in என்ற இணையதளத்தில் பதிவு இறக்கம் செய்தும் மற்றும் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 0424-2263227 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும், இந்த அரிய வாய்ப்பை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திப் பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!