கடலூரில் இந்திய ராணுவ அக்னிவீர் உடல் தகுதித் தேர்வு: ஈரோடு ஆட்சியர் தகவல்

கடலூரில் இந்திய ராணுவ அக்னிவீர் உடல் தகுதித் தேர்வு: ஈரோடு ஆட்சியர் தகவல்
X

இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு.

கடலூரில் வரும் ஜன 4 முதல் 13ம் தேதி வரை இந்திய ராணுவ அக்னிவீர் உடல் தகுதி தேர்வு நடக்கிறது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

கடலூரில் வரும் ஜன 4 முதல் 13ம் தேதி வரை இந்திய ராணுவ அக்னிவீர் உடல் தகுதி தேர்வு நடக்கிறது என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

இந்திய ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் - அக்னிவீர் படைப்பிரிவில் சேருவதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 2023 மாதம் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான உடல்தகுதி தேர்வு எதிர்வரும் 04.01.2024 முதல் 13.01.2024 வரை, கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்கள் உடல்தகுதி தேர்விற்கு வரும்போது நுழைவு சீட்டு, கல்விச் சான்றிதழ்கள், காவல் நன்னடத்தை சான்று. இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், திருமணமாகாத சான்றிதழ், புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு ஆகிய அனைத்து ஆவணங்களுடனும் வர வேண்டும். இதுகுறித்த தகவல்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

எனவே, ஈரோடு மாவட்டத்தை சார்ந்த அக்னிவீர் படைப்பிரிவில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0424-2275860, 9499055943 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!