கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, முதல் போக நன்செய் பாசனத்துக்கு, கீழ்பவானி வாய்க்காலில், கடந்த 19ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக, 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணி நிறைவடைந்துள்ளதால், நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, 20ம் தேதி இரவு 8 மணி அளவில் வினாடிக்கு 1,000 கன அடியாகவும், 21ம் தேதி மாலை 4 மணிக்கு வினாடிக்கு 1,350 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று (23ம் தேதி) புதன்கிழமை மதியம் 2 மணியளவில் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இன்று (ஆகஸ்ட் 24) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 81.84 அடி ,

நீர் இருப்பு - 16.68 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 378 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 2,350 கன அடி ,

காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு 250 கன அடி நீரும், தடப்பள்ளி-அரக்கண் கோட்டை வாய்க்காலில் பாசனத்திற்கு 500 கன அடி நீரும், குடிநீருக்காக பவானி ஆற்றில் குடிநீருக்காக 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 1,500 கன அடி நீரும் என மொத்தம் அணையில் இருந்து 2,350 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!