/* */

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 965 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து செவ்வாய்க்கிழமை (ஜூன்.11) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 652 கன அடியிலிருந்து 965 கன அடியாக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 965 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து செவ்வாய்க்கிழமை (ஜூன்.11) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 652 கன அடியிலிருந்து 965 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

நேற்று (ஜூன்.10) திங்கட்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 652 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.11) செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 965 கன அடியாக அதிகரித்தது .

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 155 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 56.55 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 56.82 அடியாக உயர்ந்தது. அப்போது, அணையில் நீர் இருப்பு 6.27 டிஎம்சியாக இருந்தது.

Updated On: 11 Jun 2024 5:45 AM GMT

Related News

Latest News

 1. உலகம்
  இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
 2. இந்தியா
  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
 3. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
 4. தமிழ்நாடு
  ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
 5. லைஃப்ஸ்டைல்
  மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
 6. லைஃப்ஸ்டைல்
  போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
 7. லைஃப்ஸ்டைல்
  அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
 8. லைஃப்ஸ்டைல்
  பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
 10. குமாரபாளையம்
  பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு