பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 952 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 952 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை (ஜூன்.7) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 592 கன அடியிலிருந்து 952 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை (ஜூன்.7) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 592 கன அடியிலிருந்து 952 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்ட மக்கள் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாகவும் விளங்குவது பவானிசாகர் அணை. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 2.47 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது. நேற்று (ஜூன்.6) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 592 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.7) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 952 கன அடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 155 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 56.14 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 56.25 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 6.10 டிஎம்சியாக உள்ளது.

மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 2.2 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்