/* */

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 848 கன அடியாக அதிகரிப்பு..!

Erode news- ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை (ஜூன்.15) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 607 கன அடியிலிருந்து 848 கன அடியாக அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 848 கன அடியாக அதிகரிப்பு..!
X

Erode news- பவானிசாகர் அணை.

Erode news, Erode news today- பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து சனிக்கிழமை (ஜூன்.15) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 607 கன அடியிலிருந்து 848 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பவானி ஆறும், மோயாறும் இணையும் இடத்தில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று (ஜூன்.14) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 607 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.15) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 848 கன அடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 155 கன அடி நீர் வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 57.52 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 57.70 அடியாக உயர்ந்தது. அணையில் நீர் இருப்பு 6.53 டிஎம்சியாக உள்ளது.

Updated On: 15 Jun 2024 4:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம் யார் தெரியுமா..?
  2. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  3. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  4. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  5. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!
  6. கல்வி
    விமானி பயிற்சி பள்ளியை அமைக்கும் ஏர் இந்தியா
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வருமானத்தை எவ்வாறு அதிகரிப்பது?
  8. சினிமா
    அன்பு, ஆனந்தி காதல்...! இனி இப்படித்தான் போகப்போகுதா?
  9. உலகம்
    அமெரிக்காவில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியர்கள்..!
  10. தமிழ்நாடு
    மொட்டைக்கடிதம் எழுதிய போலீஸ்..! 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணி..!