பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 6,714 கன அடியாக அதிகரிப்பு
Erode News- பவானிசாகர் அணை.
Erode News, Erode News Today- பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (21ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,714 கன அடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம் ஆகும். 105 அடி நீர்மட்ட உயரமுள்ள இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில், நீலகிரி மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று (20ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,038 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (21ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,714 கன அடியாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 96.98 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 97.26 அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பும் 26.42 டிஎம்சியிலிருந்து 26.63 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu