பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 656 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 656 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன்.9) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 607 கன அடியிலிருந்து 656 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன்.9) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 607 கன அடியிலிருந்து 656 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பவானி ஆறும், மோயாறும் இணையும் இடத்தில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை தமிழத்தின் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாகும். இந்த அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது. நேற்று (ஜூன்.8) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 607 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஜூன்.9) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 656 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 150 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 155 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று காலை 56.37 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 56.46 அடியாக உயர்ந்தது. அணையில் நீர் இருப்பு 6.16 டிஎம்சியாக உள்ளது.

மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 1.0 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு