பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,981 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,981 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணைப் பகுதி.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (25ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,981 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (25ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,981 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாகும். 105 அடி உயரமுள்ள இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில், நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக இருந்து வருகிறது. நேற்று (24ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,127 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (25ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,981 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 97.45 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 97.34 அடியாக சரிந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 26.78 டிஎம்சியிலிருந்து 26.69 டிஎம்சியாக குறைந்தது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு வினாடிக்கு 1,700 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 600 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 100 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 2,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story