பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,700 கன‌ அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,700 கன‌ அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை முகப்புத் தோற்றம்.

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, பவானிசாகர் அணைக்கு சனிக்கிழமை (நவ.4) இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 4,773 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, பவானிசாகர் அணைக்கு சனிக்கிழமை (நவ.4) இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 4,773 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள, 2 லட்சத்து, 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த சில நாட்களாக, பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால், அணைக்கு அவ்வப்போது அணைக்கு நீர்வரத்து குறைந்தும், அதிகரித்தும் என மாறி மாறி வந்து கொண்டுள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக அணைக்கு நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து தற்போது 64 அடிக்கும் கீழே சென்றுவிட்டது.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,773 கன‌அடியாக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை (நவ.4) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 64.77 அடி ,

நீர் இருப்பு - 8.89 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 4,773 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 700 கன அடி ,

கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் இன்று பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பவானிசாகர் அணை பகுதியில் 28.00 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil