பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,514 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,514 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணைப் பகுதி.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (15ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,514 கன‌ அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (15ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,514 கன‌ அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம் ஆகும். 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.

இந்நிலையில், நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக இருந்து வருகிறது. அணைக்கு நேற்று (14ம் தேதி) சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 859 அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (15ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,514 கன அடியாக அதிகரித்தது.

அதேசமயம், அணையின் நீர்மட்டம் நேற்று காலை 94 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 93.70 அடியாக சரிந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 24.28 டிஎம்சியிலிருந்து 24.07 டிஎம்சியாக குறைந்தது. மேலும், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3,250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..