பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை.

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை ப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கியது.

இதற்கிடையே, நேற்று முன்தினம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,227 கன அடியாக இருந்தது. இந்த நிலையில், மழையின் காரணமாக நேற்று காலை நீர்வரத்து 4,428 கன அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் நீர்வரத்து அதிகரித்து 24ஆயிரத்து 167 கன அடியாக நீர் வந்து கொண்டிருக்கிறது.105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 76.05 அடியாகவும், நீர் இருப்பு 13.68 டிஎம்சி ஆகவும் உள்ளது.

பாசனப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
the future with ai