பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,266 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 2,266 கன அடியாக அதிகரிப்பு
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (14ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,266 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (14ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,266 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது ஆகும். தமிழகத்தில் 2வது மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்ட இந்த அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பெய்யும் மழைப்பொழிவைப் பொறுத்து அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. நேற்று (13ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 513 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (14ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,266 கன அடியாக அதிகரித்தது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 69.55 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 69.73 கன அடியாக உயர்ந்தது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 10.76 டிஎம்சியிலிருந்து 10.84 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 955 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,155 அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்