பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,033 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,033 கன அடியாக அதிகரிப்பு
X

கழுகுப் பார்வையில் பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,033 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,033 கன அடியாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு கூடுதலாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெல்ல சரிந்து வந்தது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் நேற்று நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் அணைக்கு இன்று காலை நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமை (டிச.7) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 80.86அடி ,

நீர் இருப்பு - 16.14 டிஎம்சி ,

நீர் வரத்து வினாடிக்கு - 1,033 கன அடி ,

நீர் வெளியேற்றம் - 2,700 கன அடி ,

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2,200 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் இரண்டாம் போக பாசனத்திற்காக 500 கன அடி நீரும் என மொத்தம் அணையில் இருந்து 2,700 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil