பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 10,300 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 10,300 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (16ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,399 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து இன்று (16ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,399 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் கட்டப்பட்டுள்ள கீழ்பவானி அணை எனப்படும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணை ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்குவதோடு, 3 மாவட்டங்களின் முக்கிய பாசன தேவையாகவும் விளங்குகிறது.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று (15ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,369 கன அடியாக இருந்த நீர்வரத்து, (16ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 10,399 கன அடியாக அதிகரித்தது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 70.02 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 70.93 அடியாக உயர்ந்தது. விரைவில் 71 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், அணையில் நீர் இருப்பு 10.96லிருந்து 11.34 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் வினாடிக்கு 500 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 350 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 955 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும், பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 4.8 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story