ஈரோடு பெரியார் நகர் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

ஈரோடு பெரியார் நகர் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
X

பைல் படம்

ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் 7பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மாலை சோதனையில் ஈடுபட்டனர்.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தின் கிளை அலுவலகம் ஈரோடு பெரியார் நகரில் உள்ளது.

இந்த நிறுவனத்தில், 7 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். மேலும்ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகளின் திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கஞ்சா போதையில் வடமாநில இளைஞர் அராஜகம் – வடமாநில இளைஞர் மீது பொதுமக்கள் ஆத்திரம் - ஈரோட்டில் பரபரப்பு!