ஈரோடு மாவட்டத்தில் தபால் தலை சேகரிப்புக்கு ஊக்கத்தொகை

ஈரோடு மாவட்டத்தில் தபால் தலை சேகரிப்புக்கு ஊக்கத்தொகை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் தபால் தலை சேகரிக்கும் மாணவ - மாணவிகளுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்திய அஞ்சல் துறை சார்பாக பள்ளி மாணவ,மாணவிகள் மத்தியில் அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் "தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜ னா' ஊக்கத்தொகை திட்டம் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், அஞ்சல் சேகரிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு முதற்கட்டமாக வினாடி- வினா எழுத்து தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி அகில இந்திய அளவில் நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 23ம் தேதி கடைசி நாளாகும். ‌‌

அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் படிப்பவராக இருப்பதோடு, அப் பள்ளியில் தபால்தலை சேகரிக்கும் மன்றத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். தபால்தலை சேகரிப்பு மன்றம் இல்லாத பள்ளியில் படிக்கும் மாணவராக இருந்தால், அவர் சொந்தமாக தபால் தலை சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்.

முதற்கட்ட எழுத்து தேர்வில் நடப்பு நிகழ்வுகள், வரலாறு, அறிவியல், விளையாட்டு. கலாசாரம். புவியியல், அஞ்சல் தலை சேகரிப்பு தொடர்பான 50 கேள்விகள் கொண்ட விநாடி வினா நடக்கும். இரண்டாம் கட்டமாக, தபால் தலை சேகரிப்பு குறித்த திட்ட அறிக்கை, 4 முதல் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 15 அஞ்சல் தலை மற்றும் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும் இரு கட்ட தேர்வு முடிவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ-மாணவிகளுக்கு மாதம் ரூ.500 வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையாக, அவர்களது அஞ்சல் சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும்.

எனவே, இத்தேர்வுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர். ஈரோடு கோட்டம், ஈரோடு 638001' என்ற முகவரிக்கு வரும், 23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மாணவர்கள் அஞ்சல் தலை சேகரிப்பு கணக்குகளை தலைமை தபால் நிலையங்களிலும் துவங்கலாம். அதற்கான விண்ணப்பம் அனைத்து தபால் அலுவலகங்களிலும் கிடைக்கும் என ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பு அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!