ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் தி போனிக்ஸ் அசோசியேஷன் தொடக்க விழா
கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டுத் துறையின் தி போனிக்ஸ் அசோசியேஷன் தொடக்க விழா நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கணினி பயன்பாட்டு துறை தி போனிக்ஸ் அசோசியேஷன் தொடக்க விழா நேற்று முன்தினம் (19ம் தேதி) நடந்தது.
ஈரோடு அடுத்த திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணினி பயன்பாட்டுத் துறையின் தி போனிக்ஸ் அசோசியேஷன் தொடக்க விழா நேற்று முன்தினம் (19ம் தேதி) நடைபெற்றது.
இந்த விழாவிற்கு, கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் தலைமை தாங்கினார். முதல்வர் ஹெச்.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். கணினி பயன்பாட்டுத் துறைத்தலைவர் டி.ஏ.சங்கீதா வரவேற்புரை வழங்கினார்.
இந்தத் தொடக்க விழாவில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி கணினி பயன்பாட்டுத் துறை உதவிப்பேராசிரியர் கே.கணேஷ்பாபு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கணினித்துறையின் எதிர்காலம் வேலைவாய்ப்புகள் குறித்து, வரும் காலத்தில் மாணவர்கள் அதற்காக எப்படித் தங்களைத் தயார் செய்ய வேண்டும். அனைவரிடமும் படிக்கும் பழக்கம் வளர்ச்சியடைய வேண்டும்.
சுயக்கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, வேலைவாய்ப்பைத் தேடித் தேர்ந்தெடுக்கும் மனநிலை உருவாதல், நம்முன்னோர்களை மதித்தல், பிறர்கருத்துகளுக்கு மதிப்பளித்தல், தம்மால் பிறருக்கு இயன்ற அளவு உதவுதல் போன்ற நல்லப்பழக்கங்களை நம்மிடையே வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும். பல புத்தகங்களை வாசிக்கப் பழகுதல் வேண்டும் எனப் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினார்.
முடிவில், கணினி பயன்பாட்டுத் துறை உதவிப் பேராசிரியர் எஸ்.ஹேமலதா நன்றியுரை கூறினார். இதில் 300 மாணவர்களுக்கு மேல் பங்கேற்று பயன்பெற்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை கணினி பயன்பாட்டுத் துறையின் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu