ஈரோட்டில் ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா

Erode news- ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் ஸ்டாண்ட் பெயர் பலகையை முன்னாள் எம்எல்ஏ தென்னரசு திறந்து வைத்தார். உடன், முன்னாள் அமைச்சர் ராமலிங்கம் உள்ளார்.
Inauguration of Auto Stand at Erode
Erode news, Erode news today- ஈரோட்டில் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம், அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் 2 இடங்களில் ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது.
ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம், அண்ணா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் மற்றும் காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான் பவன் அலுவலகம் அருகே ஆகிய 2 இடங்களில் ஆட்டோ ஓட்டுநர் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது.
ஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துரை சேவுகன் தலைமையில் நடந்த இந்த விழாவில் ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர் ஸ்டாண்டை திறந்து வைத்தனர்.
இதில் மாவட்ட பேரவை செயலாளர் சதீஷ்குமார், பகுதி செயலாளர் ஜெயபாலாஜி மற்றும் நிர்வாகிகள் மாதேஸ்வரன், நல்லசாமி மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu