கொங்கு கலை அறிவியல் கல்லூரி உளவியல் துறையில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா

கொங்கு கலை அறிவியல் கல்லூரி உளவியல் துறையில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா
X

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உளவியல் துறை முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உளவியல் துறை முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா மற்றும் சிறப்பு விரிவுரையாளர் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உளவியல் துறை முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா மற்றும் சிறப்பு விரிவுரையாளர் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உளவியல் துறையில் உளவியில் துறை முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்கவிழா மற்றும் உளவியில் துறையில் உள்ள வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கில் சிறப்பு விரிவுரையாளர் நிகழ்ச்சியானது உளவியலின் எதிர்காலப் போக்குகள் என்னும் தலைப்பில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில், கோயம்புத்தூரைச்சேர்ந்த உளவியலாளர் வருண் முத்துச்சாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இன்றைய நிலையில் உளவியல் துறையின் வாயிலாக எந்தெந்த வேலைவாய்ப்புகள் உள்ளன என்பது குறித்தும் எதிர்காலத்தில் உளவியல் துறையின் தேவைகள் எப்படியெல்லாம் இருக்கப் போகிறது என்பது குறித்தும் விளக்கிக் கூறினார். பின்னர் மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறையில் இருந்து துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும், 180க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்த உளவியல் துறையின் பேராசிரியர்களை கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் மற்றும் முதல்வர் ஹெச்.வாசுதேவன் ஆகியோர் இணைந்து பாராட்டினர்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!