ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரம்

ஈரோடு மாநகர மாவட்ட திமுக இளைஞரணியினர் மக்களை கவரும் வகையில் ஈரோட்டில் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் மக்களை கவரும் வகையில் திமுக இளைஞர் அணியினர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகர மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மக்களை கவரும் வகையில் ஈரோட்டில் நூதன பிரசாரம் நடந்தது. அதாவது லாரியில் பெட்ரோல் பங்க், சமையல் கேஸ் மற்றும் பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தேர்தல் வாக்குறுதிப்படி கேஸ், பெட்ரோல் விலை குறைக்கப்படும் போன்ற வாசகங்கள் வைக்கப்பட்டிருந்தன.
மேலும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றியும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இந்த பிரசாரம் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே இருந்து புறப்பட்டு ஈஸ்வரன் கோவில் வீதி, பிருந்தா வீதி, மணிக்கூண்டு மற்றும் ஜவுளி மார்க்கெட் பகுதிகளில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆதரவாக உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் தலைமையில் நடந்த இந்த பிரசாரத்தில் மண்டல பொறுப்பாளர் சீனிவாசன், திமுக மாவட்ட துணை அமைப்பாளர் செந்தில்குமார், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ,ஈரோடு மாநகர செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் ஏராளமான இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ் இளைஞர் அணியை சேர்ந்தவர் ஆவார். மேலும் அவர் இளைஞர் அணி மாநில செயலாளரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவரை எப்படியாக வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு திமுக இளைஞர் அணியினர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu