ஈரோட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது

ஈரோட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கியவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட தண்டபாணி.

ஈரோட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை 3 வாகனங்களில் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை 3 வாகனங்களில் பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு வி.வி.சி.ஆர்.நகர் 2வது வீதியில் உள்ள ஒரு காலி இடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 3 வாகனங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு 3 வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அந்த வாகனங்களில் போலீசார் சோதனை நடத்தியபோது, அதில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக ஈரோடு பாலுசாமி வீதியைச் சேர்ந்த தண்டபாணி (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, ரூ.75 ஆயிரம் மதிப்பிலான 69½ கிலோ புகையிலை பொருட்களையும், பதுக்கலுக்கு பயன்படுத்திய 3 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், புகையிலை பொருட்கள் விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story
photoshop ai tool