/* */

ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர், வீராங்கனைகள்

ஈரோட்டில் நிழல் சண்டை செயல்முறையில் அசத்திய கராத்தே வீரர், வீராங்கனைகள் கண்டு பெற்றோர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர், வீராங்கனைகள்
X

நிழல் சண்டை செய்தல் முறையில் அசத்திய கராத்தே வீரர், வீராங்கனைகள்.

ஈரோட்டில் நிழல் சண்டை செயல்முறையில் அசத்திய கராத்தே வீரர், வீராங்கனைகள் கண்டு பெற்றோர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

ரோட்டில் ஜித்தோகாய் கராத்தே பயிற்சி பள்ளி சார்பில், மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பெல்ட் வழங்கும் நிகழ்வு ரயில்வே காலனி காவேரி பள்ளியில் நடைபெற்றது. ஜித்தோகாய் கராத்தே பள்ளியின் அகில இந்திய துணைச் செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

5 வயது முதல் 21 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டா எனப்படும் நிழல் சண்டை பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது. கத்தா எனப்படும் கராத்தே தற்காப்பு உத்திகளை பயன்படுத்தி, தாக்குதல் நடத்த வருபவர்களிடமிருந்து, தங்களை தற்காத்துக் கொள்ளும் விதம் குறித்தும், சாலையில் செல்லும் பெண்களிடம் நகை பறித்துச் செல்லும் வழிப்பறி திருடர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளும் நிழல் சண்டை முறைகள் குறித்தும் மாணவர்கள் கராத்தே பயிற்சிகளின் மூலம் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

இதனையடுத்து தகுதியின் அடிப்படையில் வெற்றி பெற்ற காரத்தே வீரர் வீராங்கனைகளுக்கு மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், கத்திரி, பிரவுன்- 2, பிரவுன்- 1, கருப்பு ஆகிய 8 விதமான பட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட தலைவர் சந்திரசேகர், செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் மணி, தொழில்நுட்ப இயக்குனர் கீர்த்தி வாசன், துணைச் செயலாளர் பாபு துணைத் தலைவர் யுத்தேஷ், பூர்ணிமாதேவி, காசி விசாலாட்சி உட்பட பெற்றோர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.

Updated On: 23 April 2024 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!