ஈரோடு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் 31ம் தேதி பிரசாரம்

Erode news- முதலமைச்சர் ஸ்டாலின். (கோப்பு படம்)
Erode news, Erode news today- ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 31ம் தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து மனுக்கள் மீதான பரிசீலனையும் முடிவடைந்து விட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இதனால் தலைவர்கள் தொகுதியில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி, வரும் 31ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈரோடு சின்னியம்பாளையத்தில் இந்தியா கூட்டணி சார்பில் ஈரோடு திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ், நாமக்கல் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன், கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
நாளை ( 30ம் தேதி) இரவு சேலத்தில் பொதுக்கூட்டம் முடிந்ததும், முதலமைச்சர் ஸ்டாலின் ஈரோடு வருகிறார். சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு சின்னியம்பாளையம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர், கோவை புறப்பட்டு செல்லும் அவர் அங்கிருந்து சென்னை செல்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu