ஈரோடு மாவட்டத்தில் 2023ம் ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

ஈரோடு மாவட்டத்தில் 2023ம் ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள்
X

ஈரோடு மாவட்டத்தில் 2023ல் ஆண்டில் நடந்த நிகழ்வுகள்.

2023ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் நடந்த பல பரபரப்பான நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்

2023ம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் நடந்த பல பரபரப்பான நிகழ்வுகளை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.

ஜனவரி -2023

ஜன.2ம் தேதி ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

ஜன.4ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ஜன.5ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் உடல் தகனம் ஈரோடு காவிரிக்கரையில் உள்ள ஆத்மா மின் மயானத்தில் நடைபெற்றது.

ஜன.6ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 19.44 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றனர்.

ஜன.7ம் தேதி கோபி அருகே ஊருக்குள் வழிதவறி வந்த யானை பவானி ஆற்றின் கரையோரம் முகாமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ஜன.9ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் 7,47,538 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூபாய் ஆயிரம் ரொக்கத்துடன் பச்சரிசி, சக்கரை மற்றும் 1 முழுக்கரும்புடன் சேர்த்து ரூ.79.08 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.

ஜன.11ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவையொட்டி அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

ஜன.12ம் தேதி கோபி அருகே பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஜன.13ம் தேதி திரிபுராவில் மாரடைப்பால் மரணம் அடைந்த ஈரோடு எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஜன.18ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஜன.19ம் தேதி காலிங்கராயன் வாய்க்கால் திறக்கப்பட்டு 740 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, காலிங்கராயன் சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

ஜன.25ம் தேதி சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

ஜன.26ம் தேதி ஈரோட்டில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

ஜன.30ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

பிப்ரவரி-2023

பிப்.7ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து.

பிப்.10ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் 77 வேட்பாளர்கள் போட்டி.

பிப்.13ம் தேதி ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரசாரம்.

பிப்.15ம் தேதி அதிமுக வேட்பாளர் தென்னசுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்.

பிப்.17ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட மோதலில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் மண்டை உடைந்தது.

பிப்.17ம் தேதி ஈரோடு மாவட்ட முன்னாள் ஆட்சியரும், தமிழக சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனருமான கதிரவன் நடைபயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

பிப்.19ம் தேதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம்.

பிப்.20ம் தேதி ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோயனுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம். ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம்.

பிப்.22ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் வீரப்பன் சத்திரம் தெப்பக்குளம் பகுதியில் சீமான் பிரசாரத்துக்கு வந்தபோது திமு.க. நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதில், நாம் தமிழர் கட்சியினர் 5 பேருக்கும், போலீசார் 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

பிப்.25ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலினும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வீதிவீதியாக சென்று போட்டி போட்டு பிரச்சாரம் செய்தனர்.

பிப்.25ம் தேதி மாலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

பிப.27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. இதில், 75 சதவீதம் வாக்குகள் பதிவானது.

மார்ச் - 2023

மார்.1ம் தேதி பவானி செல்லியாண்டியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடலில் சேறு பூசியும், பல்வேறு வேடமிட்டும் அம்மனை வழிபட்டனர்.

மார்.2ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் ஒட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

மார்.12ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

மார்.13ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் 22 ஆயிரத்து 604 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்.

மார்.21ம் தேதி ஈரோடு மாநகராட்சியில் ஆணையாளராக இருந்த சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

ஏப்ரல் -2023

ஏப்.4ம் தேதி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

ஏப்.5ம் தேதி சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது.

ஏப்.8ம் தேதி ரோட்டுக்கு வந்த முதல் வந்தே பாரத் ரயிலுக்கு பொது மக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஏப்.12ம் தேதி பவானிசாகர் அணையை பார்வையிட சென்ற ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் டாக்டர் மணீஷ் மற்றும் அதிகாரிகளை தேனீக்கள் கொட்டின.

ஏப்.17ம் தேதி தாளவாடி பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு பர்கூர் வனப்பகுதியில் விடப்பட்டது.

ஏப்.18ம் தேதி ஈரோட்டில் 105.08 டிகிரி வெயில் பதிவானது.

ஏப்.29ம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.

மே - 2023

மே.2ம் தேதி பவானி பகுதியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக சேதமடைந்த சாலை மற்றும் தரைமட்ட பாலங்களை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மே.4ம் தேதி புஞ்சை புளியம்பட்டி அருகே சுங்கக்காரன்பாளையத்தில் தாயை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டான்.

மே.4ம் தேதி அத்தாணி அருகே காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த கூலித்தொழிலாளியின் குடும்பத்தினருக்கு அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆறுதல் கூறினார்.

மே.4ம் தேதி கர்நாடகா சட்டமன்ற தேர்தல் எதிரொலியாக, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டன.

மே.5ம் தேதி ஈரோட்டில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் உரிமை முழக்க மாநாடு நடைபெற்றது.

மே.8ம் தேதி கவுந்தப்பாடி ஊராட்சியில், ரூ.15.69 கோடி மதிப்பீட்டில் 55 ஊரக குடியிருப்புகளுக்கான குடிநீர் திட்டப்பணியினை அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மே.8ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் 96.98 சதவீதம் மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

மே.16ம் தேதி ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜ கோபால் சுன்கரா நியமனம் செய்யப்பட்டார்.

மே.19ம் தேதி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஜவகர் நியமனம் செய்யப்பட்டார்.

மே.22ம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

மே.29ம் தேதி ஈரோட்டில் இன்ஸ்டாகிராமில் 10 ரூபாய்க்கு விடப்பட்ட சவாலை ஏற்று ஸ்கூட்டரில் வந்து நடுரோட்டில் குளித்த வாலிபருக்கு ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை.

ஜூன் - 2023

ஜூன்.12ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் 10 வனச்சரகங்களிலும் விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

ஜூன் .15ம் தேதி தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கு கூடுதலாக மது விலக்கு ஆயத்தீர்வைத்துறை ஒதுக்கப்பட்டது.

ஜூன்.21ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் 24 மதுக்கடைகள் மூடல்.

ஜூலை - 2023

ஜூலை.19ம் தேதி நடிகை சமந்தா பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தார்.

21ம் தேதி சத்தியமங்கலம் அருகே புதுக்குய்யனூர் பகுதியில் 100 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த சிறுத் தைப்புலி 10 மணி நேரம் போராடி மீட்கப்பட்டது.

25ம் தேதி கவுந்தப்பாடியில் உள்ள வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.41% லட்சம் மோசடி செய்த கோபி காளியண்ண வீதியை சேர்ந்த அங்கமுத்து கைது செய்யப்பட்டார்.

ஜூலை.30ம் தேதி ஈரோட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆகஸ்ட் - 2023

ஆக.4ம் தேதி தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடத்தப்படும் 19ம் ஆண்டு புத்தகத் திருவிழாவை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

ஆக.4ம் தேதி சத்தியமங்கலம் அடுத்த ஆசனூரில் கரும்பை தேடி கிடைக்காததால், ஆத்திரத்தில் காட்டு யானை தக்காளி பெட்டியை காலால் உதைத்து விளையாடியது வைரலானது.

ஆக.5ம் தேதி டி.என்.பாளையம் பகுதியில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியது.

ஆக.9ம் தேதி கொரோனா காரணமாக 3 ஆண்டுக ளாக நடைபெறாமல் இருந்த அந்தியூர் குதிரைச்சந்தை கோலாகலமாக நடந்தது.

ஆக.20ம் தேதி ஈரோட்டை சேர்ந்த அரசு பள்ளிக்கூட ஆசிரியை புவனேஸ்வரி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த பெரியச டையம்பாளையம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் ஜெயக்குமார் 25ம் தேதி கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர் - 2023

செப்.2ம் தேதி தொடர் மழை காரணமாக ஈரோடு பி.பி. அக்ரஹாரம் பகுதியில் வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்ததில் சாரம்மா (வயது 32), அவருடைய மகன் முகமது அஸ்தக் (வயது 13) ஆகியோர் உயிரிழந்தனர்.

செப்.6ம் தேதி ஈரோட்டில் ஆன்லைன் டிரேடிங் மூலம் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி பகுதியை சேர்ந்த மருந்தியல் கல்லூரி மாணவர் சஞ்சய் கைது செய்யப்பட்டார்.

செப்.7ம் தேதி பவானி வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் (வயது 35) கடன் தொல்லை காரணமாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

செப்.15ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் 2.16 லட்சம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

அக்டோபர் - 2023

அக்.2ம் தேதி சத்தியமங்கலம் அருகே கடம்பூர் வனப்பகுதியில் மக்ளா யானை இறந்து கிடந்தது.

அக்.2ம் தேதி புன்செய்புளியம்பட்டி அருகே ஓட்டுனரின் கட்டுப் பாட்டை இழந்த தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

அக்.10ம் தேதி தாளவாடி அருகே மான் இறைச்சி கடத்திய 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் பேரம் பேசிய 2 போலீசார் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அக்.17ம் தேதி ஈரோடு மாநகராட்சி ஆணையாளராக ஐஏஎஸ் அதிகாரி சிவகிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டார்.

அக்.19,20,21ம் தேதி ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

அக்.23ம் தேதி பாண்டியாறு - மோயாறு இணைப்பு இயக்கத்தின், தலைமை அலுவலகம் திறப்பு விழா கோபியில் திறக்கப்பட்டது.

அக்.24ம் தேதி சத்தியமங்கலம் அருகே பிக்கப் வேனை வழி மறித்து உருளைக்கிழங்கு மூட்டையை எடுத்து சென்ற ஒற்றை யானையால் டிரைவர்கள் அச்சமடைந்தனர்.

நவம்பர் - 2023

நவ.7ம் தேதி ஈரோடு மாநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் 100 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனை, அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நவ.11ம் தேதி மான் இறைச்சி கடத்தியவர்களிடம் பேரம் பேசிய காவல் உதவி ஆய்வாளர்கள் கோபால், ரத்தினம், பாலசுப்பிரமணியம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நவ.13ம் தேதி சத்தியமங்கலம் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் அதே பகுதியை சேர்ந்த மயிலானந்தன் (வயது 29), கீர்த்திவேல் துரை (வயது 27), பூவரசன் (வயது 27), ராகவன் (வயது 25) ஆகியோர் உயிரிழந்தனர்.

நவ.24ம் தேதி அந்தியூர் அடுத்த பர்கூரில் மின் வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக, விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.

நவ.26ம் தேதி தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்தது.

நவ.28ம் தேதி ஈரோட்டில் 7 வீடுகளில் திருடிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 78 பவுன் நகை கள் மீட்கப்பட்டன.

நவ.30ம் தேதி ஈரோடு அடுத்த மூலக்கரை புதுப்பாளையம் பிரிவு அருகே அடுத்தடுத்து 3 பேருந்துகள் மோதிய விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

டிசம்பர் - 2023

டிச.13ம் தேதி அந்தியூரில் உளவுப்பிரிவு போலீஸ் ஏட்டு மாரசாமி தற்கொலை செய்து கொண்டார்.

டிச.20ம் தேதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மழைக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

டிச.21ம் தேதி அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூரில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்டார்.

டிச.25ம் தேதி காலிங்காராயன் அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் பாசனத்திற்காக அமைச்சர் முத்துசாமி தண்ணீர் திறந்து வைத்தார்.

டிச.28ம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

டிச.30ம் தேதி சத்தியமங்கலம் பகுதியில் 1,548 சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி திறந்து வைத்தார்.

டிச.31ம் தேதி குட்கா பதுக்கி விற்பனை செய்த ஈரோடு மாவட்ட வணிகர் சங்க பேரவையின் (வெள்ளையன் அணி) தலைவர் ஜமீன் ராசு கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!