/* */

ஈரோட்டில் ஜூன் 21ல் திருநங்கைகள், திருநம்பிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஈரோட்டில் ஜூன் 21ல் திருநங்கைகள், திருநம்பிகளுக்கான அடையாள அட்டை சிறப்பு முகாம்!
X

அடையாள அட்டை சிறப்பு முகாம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு உதவிடும் பொருட்டு இதர நலத்திட்ட உதவிகள் வழங்கும் துறைகளுடன் ஒருங்கிணைந்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை விடுபட்டவர்களுக்கு வழங்கிட சிறப்பு முகாம் மாவட்ட தலைநகரங்களில் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சம்மந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து வருகிற 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் வளாகம், தரைத்தளம் மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் நடக்கவிருக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் விவரத்தினை பதிவு செய்து பயன் பெறலாம் .

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 11 Jun 2024 10:45 AM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  ஜம்முவில் அமைதியை கொண்டு வர ராணுவத்திற்கு முழு சுதந்திரம்
 2. திருவண்ணாமலை
  அதிமுக நமக்கு எதிரி அல்ல; பாஜக கூட்டணி தான் எதிரி: அமைச்சர் பேச்சு
 3. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
 4. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
 5. திருவள்ளூர்
  கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
 6. நாமக்கல்
  108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு மறு நினைவூட்டல் சிறப்பு பயிற்சி
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
 8. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் நாளைய (ஜூன்.19) மின்தடை
 9. செய்யாறு
  எல்லையம்மன், வேடியப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
 10. கோவை மாநகர்
  சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி