ஈரோட்டில் நாளை திருநங்கைகள், திருநம்பிகளுக்கு அடையாள அட்டை முகாம்
அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான சிறப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு உதவிடும் பொருட்டு இதர நலத்திட்ட உதவிகள் வழங்கும் துறைகளுடன் ஒருங்கிணைந்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றினை விடுபட்டவர்களுக்கு வழங்கிட சிறப்பு முகாம் மாவட்ட தலைநகரங்களில் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு அடையாள அட்டை வழங்கிட சிறப்பு முகாம் நாளை (21ம் தேதி) நடைபெறவுள்ளது. சம்மந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் வளாகம், தரைத்தள மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் நடக்கவிருக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்களின் விவரத்தினை பதிவு செய்து பயன் பெற கேட்டுக் கொள்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu