அத்தாணி குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் அக்.,24ல் மனுநீதி நாள் முகாம்

அத்தாணி குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் அக்.,24ல் மனுநீதி நாள் முகாம்
X

மனுநீதி நாள் முகாம் (பைல் படம்).

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அத்தாணி குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் 24ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அத்தாணி குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் 24ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம், அத்தாணி உள்வட்டம் குப்பாண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி மஹால் திருமண மண்டபத்தில் வரும் 24ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

அரசு மாதந்தோறும் நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் ஈரோடு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், அக்டோபர் 2024ம் மாதத்திற்கான மனுநீதி நாள் முகாம் அந்தியூர் வட்டம், அத்தாணி உள்வட்டம் குப்பாண்டம்பாளையம் கிராமம், ஸ்ரீ சரஸ்வதி மஹால் திருமண மண்டபத்தில் வரும் 24ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் அனைத்துத்துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings