அந்தியூரில் தேன்வாழை தார் ஒன்று எவ்வளவு.? என்று தெரியுமா.!

அந்தியூரில் தேன்வாழை தார் ஒன்று எவ்வளவு.? என்று தெரியுமா.!
X

பைல் படம்

அந்தியூர் புதுப்பாளையத்தில் தேன்வாழை தார் ஒன்று எவ்வளவு.? என்று தெரியுமா.! வாங்க பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது.

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 52 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 48 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 580 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 650 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 500 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 700 ரூபாய்க்கும் , தேன் வாழை தார் ஒன்று 750 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 470 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 1,606 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 3 லட்சத்து 59 ஆயிரத்து 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்