மகுடேஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணியினர் போராட்டம் அறிவிப்பு

மகுடேஸ்வரர் கோவில் முன்பு இந்து முன்னணியினர் போராட்டம் அறிவிப்பு
X

பைல் படம்.

கொடுமுடி அருகே மகுடேஸ்வரர் கோவில் முன்பு டிசம்பர் 22-ம் தேதி இந்து முன்னணியினர் முற்றுகை போராட்டம்.

கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் சில தினங்களுக்கு முன்பு ஆகம விதிக்கு எதிராக கோவில் செயல் அலுவலர், கண்காணிப்பாளர், கோவில் பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர். இச்செயல் ஆகம விதிமுறைக்கு எதிரானது என்றும், கோவில் செயல் அலுவலர், கண்காணிப்பாளர், பணியாளர்களை பணியிடை நீக்கம் செய்ய கோரியும் வரும், டிசம்பர் 22-ம் தேதி மாலை 4 மணிக்கு மகுடேஸ்வரர் கோவில் முன்பு முற்றுகை போராட்டம் நடக்கிறது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture