ஆங்கில புத்தாண்டுக்கு தடை விதிக்க இந்து முன்னணி வலியுறுத்தல்

ஆங்கில புத்தாண்டுக்கு தடை விதிக்க இந்து முன்னணி வலியுறுத்தல்
X

மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்.

தமிழ் கலாசாரத்தை அழிக்கும் ஆங்கில புத்தாண்டுக்கு தடை விதிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநிலத்தலைவர் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து முன்னணி திருப்பூர் கோட்டம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது. இதில் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது: தமிழ் கலாசாரத்தை அழிக்கும், ஆங்கில புத்தாண்டுக்கு தடை விதிக்க வேண்டும். சித்திரை முதல் நாளான, தமிழ் புத்தாண்டை மாற்ற திமுக அரசு முயற்சி செய்கிறது. இதை இந்து முன்னணி கடுமையாக கண்டிக்கிறது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலை இடிக்க முயற்சி நடக்கிறது. அவ்வாறு நடந்தால், மடாதிபதிகள், இந்துக்களை திரட்டி மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம். திமுகவின் 200 நாள் ஆட்சியில், 133 கோவில்களை இடித்து சாதனை செய்துள்ளனர். இந்து கோவில் வழிபாட்டுக்கு தடை போடுகின்றனர். பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழாவை, வழக்கம்போல் நடத்த வேண்டும். குண்டம் இறக்க பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!