ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த மழை: 601 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த மழை:  601 மி.மீ மழை பதிவு
X

மழை (கோப்புப் படம்).

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பரவலாக பகுதிகளில் பெய்த கனமழையால், மாவட்டம் முழுவதும் 601 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இம்மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று (மே.01) திங்கட்கிழமை இடி - மின்னலுடன் கனமழை பெய்தது.

ஈரோடு மாநகரில் காலையில் வெயிலடித்த நிலையில் மாலையில் மழை பெய்தது. பெருந்துறை, கவுந்தப்பாடி, தாளவாடி, சென்னிமலை பகுதிகளில் மாலையில் சாரலாகத் தொடங்கி, பலத்த மழை பெய்தது.

அதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலையில் மழை பெய்த நிலையில், இன்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை நீடித்தது. மேலும், பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் மொத்தம் 601 மி.மீ மழை பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக பெருந்துறையில் 90 மி.மீ. மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

ஈரோடு - 22 மி.மீ ,

கோபி - 38.20 மி.மீ ,

பவானி - 55.80 மி.மீ ,

பெருந்துறை - 90 மி.மீ ,

சத்தி - 12 மி.மீ ,

தாளவாடி - 78 மி.மீ ,

நம்பியூர்- 13 மி.மீ ,

கொடுமுடி - 8.20 மி.மீ ,

மொடக்குறிச்சி - 14 மி.மீ ,

கவுந்தப்பாடி - 50.20 மி.மீ ,

சென்னிமலை - 88 மி.மீ ,

எலந்தகுட்டைமேடு - 17 மி.மீ ,

பவானிசாகர் - 5.80 மி.மீ ,

வரட்டுப்பள்ளம் - 3.60 மி.மீ ,

குண்டேரிப்பள்ளம் - 51.20 மி.மீ ,

கொடிவேரி - 33 மி.மீ ,

அம்மாபேட்டை - 21 மி.மீ

மாவட்டம் முழுவதும் மொத்தம் 601 மி.மீ மழையும், சராசரியாக 35.35 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!