ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: 225 மனுக்களின் மீது விசாரணை

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: 225 மனுக்களின் மீது விசாரணை
X

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, குறைகள் கேட்டறிந்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 225 கோரிக்கை மனுக்களைப் பெற்று, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குறைகளை கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 225 கோரிக்கை மனுக்களைப் பெற்று, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா குறைகளை கேட்டறிந்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் இன்று (நவ.11) திங்கட்கிழமை நடைபெற்றது.


இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வீட்டுமனை, நத்தம் பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, அடுக்குமாடி குடியிருப்பு வழங்க வேண்டி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் இல்லம் சேர்க்கை, குடிநீர் வசதி வேண்டி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 225 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டார்.

தொடர்ந்து, தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற 5 தற்காலிக தூய்மை பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு ரூ.20 ஆயிரத்து 500 மதிப்பீட்டில் கல்வி மற்றும் மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், கொடுமுடி வட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இறந்தமைக்கு, அவரின் தாயாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையினையும் வழங்கினார்.


இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ராம்குமார், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, தாட்கோ மேலாளர் அர்ஜூன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு, நாமக்கல் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள். நமது குழுவில் இணையுங்கள். Click Now

Tags

Next Story
25 வயதிலேயே சுகர் வருதா ?.. நீங்க கவனமா  இருக்க இதெல்லாம் கவனிங்க....!