அந்தியூரில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சுகாதார நலக்கல்வி விழிப்புணர்வு முகாம்
Erode news, Erode news today- அந்தியூரில் தனியார் கார்மென்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு புகையிலை ஒழிப்பு மற்றும் தொற்றா நோய்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரம் சின்னத்தம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட தவிட்டுப்பாளையம் பகுதியில் இயங்கும் தனியார் கார்மென்சில் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மக்களைத் தேடி மருத்துவம் மூலம் ரத்த அழுத்த நோய் பரிசோதனை, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் புற்றுநோய் பரிசோதனைகள் செய்து சிகிச்சை வழங்கப்பட்டது.
தொடர்ந்து, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு நலக்கல்வி வழங்கப்பட்டது. பணியாளர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஊழியர்களுக்கு உயர் ரத்த அழுத்த நோய்,சர்க்கரை நோய் மற்றும் புற்று நோய்கள் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் பரவும் விதம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கொசு உற்பத்தியை தடுக்கும் வழிகள் பற்றியும் சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட சுகாதார அலுவலகத்தை சேர்ந்த மாவட்ட நலக்கல்வியாளர் சிவக்குமார், மாவட்ட புகையிலை பிரிவு சமூக சேவகர் சங்கீதா, நடமாடும் மருத்துவக் குழு மருத்துவ அலுவலர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், மக்களை தேடி மருத்துவ சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள்,ஆய்வக நுட்புனர், மக்களை தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் 155 பேர்கள் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu