ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் கைத்தறி பூங்கா: ஆட்சியர் தகவல்

Erode news- சிறிய அளவிலான கைத்தறி பூங்கா. (மாதிரி படம்)
Erode news, Erode news today- ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து கைத்தறி துணி ரகங்கள் உற்பத்தியை பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் வரையறையின்படி, 100 கைத்தறிகள் அமைத்து, அதற்கு தேவையான தொழிற்கூடம், தறி, குடோன் வசதி அமைத்து மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக பொது வசதி மையங்கள் உருவாக்கப்பட்டு, தொழில் முனைவோர் தேவைக்காக தயார் படுத்தப்பட்டு வருகிறது.
கைத்தறி துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருவோர், மேற்படி சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் மூலம் உற்பத்தி செய்து, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து, ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது. இதில் பயனடைய விரும்புவோர், www.loomworld.in என்ற இணையதள முகவரியில் உரிய படிவத்தில் வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu