ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி
Erode News- கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்.
Erode News, Erode News Today- ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று (26ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு அடுத்த திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு மற்றும் கவின் புனைவியல் துறை, நுண்கலை மன்றம், கோவை மக்கள் சேவை மையம், டீரீம் ஜோன் ஆகியவை ஒன்றிணைந்து தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டமாக ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியினை நடத்தியது.
இதில், கல்வியாளர், பேரா ஸ்போர்ட்ஸ் நிறுவனர் சர்மிளா ராம் ஆனந் சிறப்பு விருந்தினராய் கலந்து கொண்டார். மாணவர்களிடையே கைத்தறி ஆடைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆடை அலங்கார அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களை தேசிய அளவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், ஆடை வடிவமைப்பு மற்றும் கவின் புனைவியல் துறைத் தலைவர் எஸ்.மஞ்சுளா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் சிறப்புரை ஆற்றினார். கணினி அறிவியல் துறை உதவிப் போராசிரியார் கோகிலா நன்றியுரை ஆற்றினார்.
இதில், போராசிரியர்களும் மாணவர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆடை வடிவமைப்பு மற்றும் கவின் புனைவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu