சிறுவலூர், அயலூரில் காசநோய், உலக கை கழுவுதல் தின விழிப்புணர்வு முகாம்..!

சிறுவலூர், அயலூரில் காசநோய், உலக கை கழுவுதல் தின விழிப்புணர்வு முகாம்..!
X

சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூர் மற்றும் அயலூரில் காசநோய் ஒழிப்பு மற்றும் உலக கை கழுவுதல் தின விழிப்புணர்வு முகாம் இன்று (15ம் தேதி) நடைபெற்றது.

கோபி அருகே உள்ள சிறுவலூர் மற்றும் அயலூரில் காசநோய் ஒழிப்பு மற்றும் உலக கை கழுவுதல் தின விழிப்புணர்வு முகாம் இன்று (15ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபி வட்டாரம் சிறுவலூர் மற்றும் அயலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு காச நோய் ஒழிப்பு மற்றும் உலக கை கழுவுதல் தின விழிப்புணர்வு சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் அறிவுறுத்தலின் படி நடைபெற்ற இந்த முகாம்களில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் மற்றும் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி யின் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


தொடர்ந்து, கை கழுவுவதால் தடுக்கப்படும் நோய்கள், கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள், கை கழுவும் முறைகள், பள்ளி பருவத்தினருக்கு கை கழுவும் முறைகள் பற்றி பயிற்சி வழங்கப்பட வேண்டியதின் அவசியம், மழைக்காலத்தில் பரவும் நோய்கள் அதன் தடுப்பு முறைகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், பாதுகாப்பற்ற குடிநீரால் பரவும் நோய்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது. மேலும் கை கழுவும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு செய்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.


இம்முகாம்களில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவ பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், மருத்துவ அலுவலர்கள் ராஜா ஸ்ரீதர், ஓம் பிரகாஷ், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சேதுராமன், சுகந்த், கிரண் மோனிஷ்வரன், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 120 பேர்கள் கலந்து கொண்டனர். மேலும், முகாம்களில் கலந்து கொண்டவர்களுக்கு காச நோய்க்கான எக்ஸ்ரே பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story
Similar Posts
இந்தியாவில் டெஸ்டினேஷன் திருமணங்கள் நடத்துவதற்கு சிறந்த ஐந்து இடங்கள்
ஓடிடியில் வேட்டையன்! இவ்ளோ சீக்கிரமாவேவா?
சரியான வயதில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ளுங்கள்..! ஒரு அனுபவக் கதை..!
விளையாட்டு போட்டிகளில் அதிக பதக்கங்கள்: ஈரோடு கொங்கு கல்லூரி மாணவர்கள் சாதனை
பெருந்துறை ஊராட்சி ஒன்றிய பகுதி வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு
மாற்றுத்திறனாளி எம்பிபிஎஸ் டாக்டர் ஆக முடியுமா? சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு
தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில்
மகாராஷ்டிரா மற்றும்  ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிப்பு
chicxulub பூமியில் டைனோசர் அழிவதற்கு காரணமான எரிகல் பள்ளம்!
தாய்க்கு மார்பகப்புற்று இருந்தால் மகளுக்கும் வருமா..? அவசியம் தெரியணும்ங்க..!
சிறுவலூர், அயலூரில் காசநோய், உலக கை கழுவுதல் தின விழிப்புணர்வு முகாம்..!
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் வரும் 19ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம்